மொத்த சனத்தொகையில் 17 சதவீத மக்கள் வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அண்ணளவாக 40 இலட்சம் பேர் அதாவது மொத்த சனத்தொகையில் 17 சதவீத மக்கள் வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளனர் எனவும், ஒன்பது மாகாணங்களிலும் இந்நிலமை காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் வறுமையில் வாடும் நிலைமையில் நைட்ரஜன் உர மோசடி, மலக்கழிவு உர மோசடி போன்ற மோசடிகளில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.