deepamnews
சர்வதேசம்

துருக்கியில் ரூ.8,200 கோடிக்கு போலி அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

துருக்கியில் 8ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான போலி அமெரிக்க டாலர் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக 6 வெளிநாட்டவரை துருக்கி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இஸ்தான்புல்லில் உள்ள Kagithane மாவட்டத்தில் சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த நபர்களை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவர்களிடம் இருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பப்பட இருந்த ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் போலி கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. துருக்கியின் வரலாற்றிலேயே இது மிகப்பெரிய கள்ளநோட்டு கடத்தல் சம்பவமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இம்ரான் கானை கைது செய்வதற்கான பிடியாணை நிறுத்திவைப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு

videodeepam

பாகிஸ்தான் பள்ளிவாசலில் வெடிப்பு சம்பவம் – 28 பேர் பலி, 150க்கும் மேற்பட்டோர் காயம்

videodeepam

22 வருடங்களில் இல்லாத அளவு வட்டி வீதத்தை உயர்த்திய அமெரிக்க மத்திய வங்கி.

videodeepam