deepamnews
இலங்கை

2 பிள்ளைகளை முச்சக்கரவண்டியில் கைவிட்டுச் சென்ற தாய் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தாயொருவர் தனது 9 வயது மகனையும் 6 மாத கைக்குழந்தையையும் முச்சக்கரவண்டியில் கைவிட்டுச் சென்ற சம்பவமொன்று அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பெண்ணொருவர் தம்மிடம் வந்து 2 பிள்ளைகளை கொடுத்து சிறிது நேரம் பார்த்துக்கொள்ளுமாறு கூறிச் சென்றதாகவும் நீண்ட நேரமாகியும் குறித்த பெண் திரும்பி வராததால் பிள்ளைகளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க தாம் வந்ததாகவும் முச்சக்கரவண்டி சாரதி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து விசாரணை நடத்திய அம்பலாங்கொடை பொலிஸார் தாய்ப்பாலின்றி நோய்வாய்ப்பட்டிருந்த 6 மாத கைக்குழந்தையை பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த 2 பிள்ளைகளும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த தாய் போதைப் பொருளுக்கு அடிமையானர் எனவும் அவரை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இந்த சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

அரிசி இறக்குமதியை உடனடியாக நிறுத்த வேண்டும் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு 

videodeepam

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வரை எந்த தேர்தலும் இடம்பெறமாட்டாது – தேசிய நாளிதழ் செய்தி வெளியீடு

videodeepam

மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு

videodeepam