மக்களுக்கு வரி நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இந்த நாட்களில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் மக்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ள நிலையில் எவ்வாறு அதனை வழங்குவது என்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இந்த நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி அதிகரித்து வரும் நிலையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் போது வர்த்தகர்கள் அதன் பிரதிபலனை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.
வர்த்தகர்கள் அவ்வாறு பொருட்களுக்கான விலைக்குறைப்பு செய்வதில் சிக்கல்கள் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.