deepamnews
இந்தியா

செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கம் – ஆளுநர் அதிரடி உத்தரவு!

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டதையடுத்து அவரது இலாகாக்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துச்சாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. மின்சாரத்துறை தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை முத்துச்சாமி வசமும் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி முதலில் அனுமதி மறுத்த நிலையில், மீண்டும் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. அதோடு இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

தண்ணீர் பாதுகாப்பு முயற்சியில் மக்களும் பங்கேற்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு

videodeepam

மோடியின் அவரது வசீகரத்துக்காகவே மக்கள் வாக்களித்தனர் – தேசியவாத கட்சியின் தலைவர் தெரிவிப்பு  

videodeepam

நளினி உள்பட 6 பேரின் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்

videodeepam