deepamnews
சர்வதேசம்

காதலர்களை வாடகைக்கு எடுக்க பிரத்தியேக இணையத்தளம்! – ஜப்பான் அரசு அறிமுகம்.

ஜப்பானில் காதலர்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ள பிரத்தியேக இணையத்தளத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக ஜப்பானில் தனியாக வாழும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், வாடகைக்குக் காதலர்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஜப்பான் அரசு கொண்டுவந்துள்ளது.

ஜப்பானில் ஏராளமான இளைஞர்கள், காதலர்கள் கிடைக்காமல் மனதளவில் சோர்வடைந்துள்ளதாகவும் இதனால், காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் திட்டத்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதாவது ஒரு மணிநேரத்திற்கு 3,000 ரூபாய்க்குக் காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாமாம்.

ஆனால், குறைந்தபட்சம் 2 மணிநேரத்திற்கு அவர்களை வாடகைக்கு எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி தமக்கான ஜோடியை தெரிவு செய்யும் இணையத்தளத்திற்கு முன்பணமும் செலுத்தப்பட வேண்டும்.

மேலும் உங்களுக்கான ஜோடியை தெரிவு செய்ய கூடுதலாக 1,200 கட்டணம் செலுத்த வேண்டும்.

வாடகைக்கு இருக்கும் நபர்களை நேரடியாக வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளக்கூடாது.

அதற்காகவே இருக்கும் செயலி மூலமே தொடர்பு கொள்ள வேண்டும்.

வாடகைக்கு எடுக்கும் நபர்களிடமிருந்து எவ்விதமான பரிசுப் பொருட்களையும் வாங்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கேள்விப்பட்ட இணையவாசிகள் கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Related posts

ரஷ்யா ஏவிய 29 ஏவுகணைகளை தான் வீழ்த்தியதாக உக்ரேன் தெரிவிப்பு

videodeepam

இரண்டாண்டு தடைக்குப் பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் மீண்டும் ட்ரம்ப் – மெட்டா விளக்கம்

videodeepam

பெலாரஸ் வழக்கறிஞர், உக்ரைன், ரஷ்ய மனித உரிமை அமைப்புகளுக்கு  அமைதிக்கான நோபல் பரிசு

videodeepam