எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக கையொப்பமிடப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன உள்ளிட்டோர் குறித்த பிரேரணையை இன்று கையளித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அவநம்பிக்கை பிரேரணையில் 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை கையொப்பமிட்டுள்ளனர்.
பொறுப்பற்ற முறையில் தரக்குறைவான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை இறக்குமதி செய்தமையினூடாக சுகாதாரத்துறை நலிவடைந்துள்ளதுடன் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியினால் சுகாதார அமைச்சருக்கு எதிராக இந்த அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.