மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொலி (Ibrahim Mohamed Solih)தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
தனது மனைவியுடன் நேற்று பகல் அவர் நாட்டிற்கு வருகை தந்ததாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் கூறினார்.
இப்ராஹிம் மொஹமட் சொலி மாலைத்தீவு குடியரசின் 7 ஆவது ஜனாதிபதி ஆவார். இவர் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்றார்.
மாலைதீவு பொருளாதாரம் வெற்றிகரமாக கொரோனாவிற்கு முந்தைய நிலைக்கு திரும்பியுள்ளதாக அறிவித்த மறுதினம் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த வருடம் மாலைதீவின் பொருளாதார வளர்ச்சி 12.3 வீதமாக காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் இது 7.6 வீதமாக காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.