deepamnews
இலங்கை

பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானம்?

2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான 33 இலட்சம் பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முதன்மைச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

பாடப்புத்தகங்கள் அச்சிடுவதற்காக ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவிடவேண்டி உள்ளதாலும் காகித தட்டுப்பாடு காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பழைய பாடப்புத்தகங்களை சேகரித்து மாணவர்களுக்கு வழங்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

கிழக்கு மாகாணத்தை நாசப்படுத்தியுள்ளார் ஆளுநர் அனுராதா யஹம்பத் – சாணக்கியன் குற்றச்சாட்டு

videodeepam

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரி உட்பட இருவர் கைது

videodeepam

அரசாங்கத்தின் மற்றுமொரு மோசடிக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் – உதய கம்மன்பில குற்றச்சாட்டு

videodeepam