deepamnews
இலங்கை

யாழ் விமான சேவை மீண்டும் ஆரம்பம் .

யாழ்ப்பாணம் சென்னை இடையேயான விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமானது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோவிட் தொற்றுக் காரணமாக மூடப்பட்டு இன்றுவரை மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.

இவ்வாறு மூடிய நிலையில் உள்ள யாழ்ப்பாணம் விமான நிலையம் மீண்டும் டிசம்பர் 12 ஆம் திகதி திறக்கப்பட்டு சென்னைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆரம்ப பணிகளிற்காக நேற்றைய தினம் சுற்றுலா அதிகார சபையில் இருந்து இரு அதிகாரிகள் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

இவ்வாறு இடம்பெறவுள்ளதாக கூறப்படும் விமான சேவைக்கான விமான சிட்டைகள் இன்று முதல் முற்பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அவுஸ்ரேலியாவுக்கு ஆள் கடத்தும் பிள்ளையான் – விசாரணை குழுவை நியமிக்குமாறு சாணக்கியன் கோரிக்கை

videodeepam

முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் மாலதியின் 35 ஆவது நினைவேந்தல்

videodeepam

சுதந்திர கட்சியிலிருந்து விலகியவர்கள் சதி முயற்சி – தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு

videodeepam