deepamnews
இலங்கை

கொத்து ரொட்டி, ப்ரைட் ரைசின் விலை  10 சதவீதம் குறைப்பு.

கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைசின் விலையை 10 சதவீதம் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் பலனை வாடிக்கையாளருக்கு வழங்கும் வகையில் கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைசின் விலையை குறைக்க உணவகம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நேற்று  நள்ளிரவு முதல் 10 சதவீதம் விலை குறைப்பு அமுலுக்கு வந்துள்ளதாக  உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்

Related posts

பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி திட்டம்

videodeepam

வடக்கு, கிழக்கில் கால்நடைகளின் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு – காரணத்தை கண்டறிய மாதிரிகள் பரிசோதனை

videodeepam

வெப்பமான காலநிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

videodeepam