deepamnews
இலங்கை

நாடு வங்குரோத்து அடைவதற்கான காரணங்கள் – விரிவுரையாளர்களின் ஆலோசனையை பெற தீர்மானம்.

நாடு வங்குரோத்து அடைவதற்கான காரணங்களைக் கண்டறிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆலோசனையைப் பெறுவதற்கு பாராளுமன்றத்தின் விசேட குழு தீர்மானித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பொருளியல் பீட தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தமது குழு தீர்மானித்துள்ளதாக நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாடு வங்குரோத்து நிலையை அடைவதற்கான காரணங்களை கையாள்வதற்கான அடிப்படை திட்டத்தை குறித்த புத்திஜீவிகளுடன் கலந்தாலோசித்து தயாரிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாடு வங்குரோத்து அடைவதற்கான காரணத்தை கண்டறிவதே தமது குழுவின் முக்கிய நோக்கம் என சாகர காரியவசம் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதவாறு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும் என நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர் சாகர காரியவசம் மேலும் கூறினார்.

Related posts

மாலதி அவர்களின் 36 ஆவது நினைவு தின நிகழ்வுகள்.

videodeepam

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் – வீதிகள் பல மூடப்படுகின்றன

videodeepam

புதிய  நாடாளுமன்றம் வேண்டும்.  அதுவே எங்களது தேவை – மனோ கணேசன்

videodeepam