deepamnews
இலங்கை

புதிய  நாடாளுமன்றம் வேண்டும்.  அதுவே எங்களது தேவை – மனோ கணேசன்

எனக்கு அமைச்சு பதவி கொடுத்து அதில் அமரச் செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகவே இருக்கின்றார் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாளைக்கே என்றாலும் என்னால் அமைச்சுப் பதவியில் அமர முடியும், ஆனால் நான் தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  

 தேசிய சபை என்றால் நாங்கள் இருந்த இடத்தில் இருந்தே, நல்ல விடயங்களுக்கு அரசாங்கத்திற்கு  ஆதரவளிக்க முடியும்.   ஆனால் அதனை பயன்படுத்த அரசாங்கம் தவறுமானால் அதோ கதிதான். எப்படியிருந்தாலும், அடுத்த வருடத்தில் ஒரு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.  புதிய  நாடாளுமன்றம் வேண்டும்.  அதுவே எங்களது தேவை.  அதற்காக நாங்கள் நிச்சயமாக போராடுவோம்.

அதன் மூலமாகத்தான், ஐஎம்எப் ஆக இருந்தாலும் சரி, உலக வங்கியாக இருந்தாலும் சரி, ஆசிய அபிவிருத்தி வங்கியாக இருந்தாலும் சரி, ஏனைய உலக நாடுகளாக இருந்தாலும் சரி இலங்கையை நம்பி கடன் கொடுப்பார்கள். எனவே அடுத்து வருபவற்றை பொறுத்திருந்து பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சங்கானைப் பகுதியில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் செயற்றிட்டம் முன்னெடுப்பு

videodeepam

ஜெனிவாவில் தீர்மானம் மீது இலங்கை வாக்கெடுப்பைக் கோரும்.- அமைச்சர் அலி சப்ரி தகவல்

videodeepam

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை நிதியாக 333 மில்லியன் டாலர்கள் கிடைக்க பெற்றது – ஜனாதிபதி தெரிவிப்பு

videodeepam