deepamnews
இலங்கை

மதுபான விற்பனை 30% வீழ்ச்சி – மூடப்பட்டது மதுபான உற்பத்தி நிலையங்கள்  

மதுபான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்கள் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மது விற்பனை சுமார் 30% குறைந்துள்ளதே இதற்குக் காரணம்.

சில மதுபான நிறுவனங்கள் காலாவதியாகும் நிலையிலும் உற்பத்தி செய்யப்பட்ட பியர்களை பதுக்கி வைத்திருப்பதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளூர் மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

22 பில்லியன் வருடாந்த ஏற்றுமதி வருமானத்தை 30-35 பில்லியனாக அதிகரிப்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

அத்துடன், கடந்த காலங்களில் எத்தனோலின் விலை வேகமாக அதிகரித்த போதிலும், எத்தனோலின் விலை குறைந்துள்ளதுடன், இலங்கையில் எத்தனோல் உபரியாக காணப்படுவதாகவும் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ள பின்னணியில், அரச ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் கைகளில் குறைந்த அளவு பணம் இருப்பதால், மதுபானம் வாங்குவதற்கான ஊக்குவிப்பு குறைந்துள்ளதாக கலால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி குறிப்பிட்ட உண்மை விடயங்களை  தமிழ் தலைமைகள் பகிரங்கப்படுத்த வேண்டும் – கஜேந்திரகுமார் தெரிவிப்பு

videodeepam

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

videodeepam

மாணவர்களின் போராட்டத்தின்போது காலாவதியான கண்ணீர்ப்புகை பிரயோகிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

videodeepam