தொழில்நுட்ப பாகங்களை தயாரிக்கும் புதிய ஆலையை உருவாக்க 200 மில்லியன் டொலர்கள் வரை முதலீடு செய்ய ஃபாக்ஸ்கான் துணை நிறுவனம் தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தகவல் தொடர்பு, மொபைல் நெட்வொர்க் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் உபகரணங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 180 மில்லியன் டொலர் முதல் 200 மில்லியன் டொலர் வரை இந்த வசதிக்காக முதலீடு செய்யும் திட்டத்தை மாநில அதிகாரிகளுடன் பகிர்ந்துள்ளது என்று குறிப்பிடப்படுகின்றது.
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப பாகங்கள் தயாரிப்பாளரான ஃபாக்ஸ்கான் தமிழகத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ் நாட்டு தொழில் துறையின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஏற்கனவே சென்னைக்கு அருகில் பாரிய கட்டத்தில் செயல்பட்டு வருகிறது. உலகம் தரம் வாய்ந்த அப்பிள் ஐபோன்களை தயாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.