deepamnews
இந்தியா

நீரை காட்டிலும் இரத்தம் பருமனானது – இலங்கை, இந்திய உறவு குறித்து எஸ்.ஜெய்சங்கர் கருத்து  

நீரை காட்டிலும் இரத்தம் பருமனானது. இது போன்றே இலங்கையும் இந்தியாவின் உறவு உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

எனவே இக்கட்டான நிலையிலும் இந்தியா, இலங்கையுடன் இணைந்து செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின்கீழ் இந்தியா செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் இந்தக் கருத்துக்களை அவர் வெளியிட்டார்.

இதேவேளை கடினமான தருணங்களை கடந்து வரும்போது இலங்கையின் உண்மையான நண்பர் யார் என்பதே முக்கியம் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவும் பங்கேற்றார்.

Related posts

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருகிறார்- பழ. நெடுமாறன மீண்டும் வலியுறுத்தல்

videodeepam

பொலிஸ் அதிகாரியால் சுடப்பட்ட ஒடிசா அமைச்சர் சிகிச்சைப் பலனின்றி மரணம்

videodeepam

மக்களவைத் தேர்தலுக்குள் அதிமுக இணைப்பு நடக்கும் – சசிகலா நம்பிக்கை

videodeepam