deepamnews
இலங்கை

கணக்குகளை மீளப்பெறுவதாக எந்தவொரு அரச நிறுவனமும்  அறிவிக்கவில்லை – மக்கள் வங்கி தெரிவிப்பு

தமது வங்கியினால் பராமரிக்கப்படும் அரச நிறுவனங்களின் கணக்குகளை மீளப்பெறுவதாக எந்தவொரு அரச நிறுவனமும் இதுவரை தமக்கு அறிவிக்கவில்லை என மக்கள் வங்கி அறிவித்துள்ளது..

மக்கள் வங்கியிலுள்ள கணக்குகளை மீளப்பெறுவதற்கு, அரச நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய பத்திரிகைகளில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு மக்கள் வங்கி அறிக்கையொன்றின் மூலம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த செய்தி தவறானது என மக்கள் வங்கி குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அனைத்து பொது மற்றும் தனியார் துறை வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மக்கள் வங்கி நன்கு வசதிகளைக் கொண்டுள்ளது.

இதேவேளை அரச வங்கிகளில் மாத்திரம் பேணப்பட்டு வந்த அரச நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை தனியார் வங்கிகளில் ஆரம்பிக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக வெளியான தகவலை அடுத்தே மக்கள் வங்கியின் அறிக்கை வெளியாகியுள்ளது.

Related posts

கோட்டாபயவை ஆட்சியில் அமர்த்தவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவிப்பு

videodeepam

சமஷ்டி அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக இரா.சம்பந்தன் தெரிவிப்பு

videodeepam

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

videodeepam