deepamnews
சர்வதேசம்

ரஷ்ய போர் கப்பலை தாக்கும் உக்ரைன் கடல்வழி ட்ரோன்கள்

ரஷ்ய போர் கப்பலை உக்ரைன் கடல்வழி ட்ரோன்கள் தாக்கும் காணொளி காட்சிகள், உக்ரைனின் பாதுகாப்பு சேவைகளால் பகிரப்பட்டுள்ளது.

குறித்த காணொளியில், ‘உக்ரைனிய கடல்வழி ட்ரோன்கள் கருங்கடல் வழியாக நகர்ந்து ரஷ்யாவின் நோவோரோசிஸ்க்  துறைமுகத்திற்கு அருகே நின்று கொண்டு இருந்த ரஷ்ய கப்பல் மீது மோதியுள்ளன.

இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தளத்திற்கு வெளியே நடத்தப்பட்ட இரண்டு உக்ரைனிய ட்ரோன்களின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.

அத்துடன் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு ட்ரோன்கள் முழுவதும் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ரஷ்யாவின் ஒலெனெகோர்ஸ்கி கோர்னியாக் கப்பல் உக்ரைனின் கடல்வழி ட்ரோன்களால் தாக்கபட்டது என உக்ரைனிய உளவுத் துறை தெரிவித்துள்ளது.

இவை உபகரணங்கள் மற்றும் பணியாளர்களை கடற்கரையில் தரையிறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை.

இந்த தாக்குதலின் போது 450 கிலோ ரி.என்.ரி களை உக்ரைன் ட்ரோன்கள் சுமந்து இருந்ததுடன் 100 ரஷ்ய பணியாளர் கப்பலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால் ரஷ்ய கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவல்களையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

இருப்பினும் துறைமுக தகவல் அறிந்த ஆதாரம் வழங்கிய தகவலில், ரஷ்ய கடற்படை கப்பல் ஒன்று சேதமடைந்து கரைக்கு இழுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரான்ஸ் பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு, (Annie Ernaux) இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

videodeepam

நான்கு பிள்ளைகளை கொன்றதாக கைதான தாய் 20 வருடங்களின் பின் விடுதலை!

videodeepam

பிரான்ஸில் அரச பாடசாலைகளில் மாணவிகள் அபாயா அணிய தடை!

videodeepam