deepamnews
சர்வதேசம்

பிரான்ஸில் அரச பாடசாலைகளில் மாணவிகள் அபாயா அணிய தடை!

பிரான்ஸ் அரசினால் நடத்திச் செல்லப்படும் பாடசாலைகளில் மாணவிகள் அபாயா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என  அந்த நாட்டு கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி ஆண்டு எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த சட்டம் மிக விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளது.

அரச பாடசாலைகளில் மற்றும் அரசாங்க கட்டடங்களில் மத அடையாளங்களுக்கு பிரான்ஸ் கடுமையான தடைகளை விதித்துள்ளது.

அவை மதசார்பற்ற சட்டங்களை மீறுகிறது என அந்த நாட்டு அரசாங்கம் வாதிட்டுள்ளது.

பல மாதங்களாக நடைபெற்று வந்த வாதப்பிரதிவாதங்களை அடுத்தே அபாயாவைத் தடை செய்யும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

திட்டமிட்டப்படி இராணுவ உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் – வடகொரியா அறிவிப்பு

videodeepam

22 வருடங்களில் இல்லாத அளவு வட்டி வீதத்தை உயர்த்திய அமெரிக்க மத்திய வங்கி.

videodeepam

இம்ரான் கானை 8 நாட்கள் தடுப்பு காவலில் வைக்க உத்தரவு

videodeepam