deepamnews
இலங்கை

மின்கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்  .

மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்யும் வகையில் மின்கட்டணத்தை உடனடியாக மீண்டும் ஒருமுறை அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

மின்சார சபையின் பொது முகாமையாளர் ஜி.ஏ.டி.ஆர்.பி. செனவிரத்ன கடந்த 21ஆம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி, மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் இந்த வருடத்தின், அடுத்த சில மாதங்களுக்கான செலவுகளை ஈடுகட்ட முடியாது என தெரிவித்துள்ளார்.

மின்சார சபைக்கான வருமானத்தை 3,300 கோடி ரூபாவால் அதிகரிக்கும் வகையில் இந்தக் கட்டண அதிகரிப்பு அமுலாக வேண்டுமென மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

எனினும், கடந்த 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணம் மீண்டும் 25 வீதத்தால் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று மீண்டும் விமான சேவைகள் ஆரம்பம்

videodeepam

அரசாங்கத்திற்கு அசௌகரியம் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு சீல் வைப்பு

videodeepam

இலங்கைக்கு அருகே சக்தி வாய்ந்த நில நடுக்கம்! – ஆபத்து இல்லை என அறிவிப்பு

videodeepam