deepamnews
இலங்கை

அரசாங்கத்திற்கு அசௌகரியம் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு சீல் வைப்பு

கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய, கொள்ளுப்பிட்டி பொலிஸார் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரின் அலுவலகத்திற்கு நேற்று சீல் வைத்துள்ளனர்.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தினார்.

அலுவலகத்திற்குள் அரசாங்கத்திற்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, அது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கையிட்டு இந்த உத்தரவு பெறப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் நாடு திரும்பியதும் அவர் முன்னிலையில் அலுவலகம் மீண்டும் திறக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

அதிகாரப் பகிர்வுக்கான ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு இந்திய பிரதமர் மோடி ஆதரவு.

videodeepam

யாழில் தூக்கில் தொங்கியவாறு இளைஞனின் சடலம் மீட்பு!

videodeepam

190 மருந்துகளுக்கு தட்டுப்பாடு – சுகாதார அமைச்சர் அறிவிப்பு.

videodeepam