deepamnews
இலங்கை

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு காரணமாக சில விலைகள் மற்றும் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டதுடன், சில துறைசார் விலைகள் மற்றும் கட்டணங்களையும் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உணவுப் பொருட்களின் விலைகளும், நிர்மாணத் துறை, தொடர்பாடல் சேவை, கைத்தொழில் மற்றும் உற்பத்தி தொழிற்துறையுடன் தொடர்புடைய கட்டணங்களும் உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிற்றுணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொதி, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகள் 10 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், சிற்றுண்டிகள், பால்தேநீர், அப்பம் உள்ளிட்ட கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும், பேனை, பென்சில், உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் பிரதிகள் எடுப்பதற்காக அறவிடப்படும் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தொடர்பாடல் நிலைய உரிமையாளர்கள் தலைவர், இந்ரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின் கட்டண அதிகரிப்பால், கைத்தொழில் துறைசார் செலவினங்களும் அதிகரித்துள்ளதாக சிறு கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிலுக்ஷ தெரிவித்துள்ளார்.

உணவு பொதியிடலுக்காக பயன்படுத்தும் 3 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட லன்ச் சீட் தற்போது 5 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

உணவு பொதியிடல் காகிதமும் 5 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

இந்தநிலையில், உணவு பொதியிடலுக்காகப் பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் 15 முதல் 20 சதவீதம் வரையில் விற்பனை செய்யப்படும்.

இவையனைத்தும் தமது தொழிற்கட்டமைப்பை பாதுகாத்து கொள்வதற்காகவே அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தற்போதைய நிலையில், நிர்மாணத்துறை, மேலும் நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும் என நிர்மாணத்துறை சேவை சங்கத்தின் தலைவர் சுபுன் அபேசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை

videodeepam

வங்காள விரிகுடாவில் வலுவடையும் தாழமுக்கம் – மீனவர்களுக்கு   எச்சரிக்கை

videodeepam

ஜனாதிபதியின் விஷேட உரை இன்று.

videodeepam