deepamnews
இலங்கை

இலங்கைக்கான நாணய நிதியத்தின் உதவித்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி நிறைவேற்று சபைக்கு சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கு உதவி  வழங்குவது தொடர்பான வேலைத்திட்டம் மார்ச் மாதம் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக்கு சமர்ப்பிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா  தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சீனா, இந்தியா உள்ளிட்ட அனைத்து முக்கிய கடன் வழங்குநர்களிடமிருந்தும் பாரிஸ் கிளப்பிடம் இருந்தும் தீர்மானமிக்க கொள்கை செயற்பாடுகளையும், நிதி உறுதிப்பாடுகளையும் பெற்றுக்கொள்வதில் இலங்கை அதிகாரிகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை தான் பாராட்டுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால்  கடன் வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்ட பின்னர் ஏனைய தரப்பினரும் இலங்கைக்கு  கடன் வழங்குவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

நிறைவேற்றுக் குழுவின் அனுமதியானது உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட ஏனைய கடன் வழங்குநர்களிடமிருந்து நிதியுதவியை ஊக்குவிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

பால்மா விலை மீண்டும் குறைப்பு..!

videodeepam

நீண்ட கால மின் உற்பத்தி திட்டத்தை நாடாளுமன்றத்தில்  சமர்ப்பித்தார் அமைச்சர் கஞ்சன விஜசேகர

videodeepam

தமிழ் மக்களுடன் கனடா இணைந்து பயணிக்கும் – சிறீதரனிடம் தூதுவர் நேரில் உறுதி.

videodeepam