deepamnews
இலங்கை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று மீண்டும் விமான சேவைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதல் விமானம் முற்பகல் 10.50 அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதனையடுத்து எலையன்ஸ் ஏர் விமானம் முற்பகல் 11.50 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது.

இந்த வகையில் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே வாரந்தோறும் நான்கு விமானங்கள் இயக்கப்படும்.

பலாலி விமான நிலையம் 2019 ஒக்டோபர் மாதம் அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தினால் மீள் அபிவிருத்தி செய்யப்பட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டது.

முதல் சர்வதேச விமானம் சென்னையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியது. ஏர் இந்தியாவிற்கு முழு உரித்துடைய துணை நிறுவனமான எலையன்ஸ் விமான சேவை, சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வாராந்தம் மூன்று விமான சேவைகளை நடத்தியது.

இருப்பினும், 2019 நவம்பரில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், விமான போக்குவரத்து செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.

எவ்வாறாயினும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவையை ஆரம்பிக்க புதிய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை எதிர்காலத்தில் மிகப் பெரிய விமானங்களுக்கு இடமளிக்கும் வகையில் ஓடுபாதை மீளமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

வாக்காளர் ஒருவருக்கு வேட்பாளர் செலவு செய்யக்கூடிய தொகை 20 ரூபாவாக அதிகரிப்பு

videodeepam

பிரதமர் தினேஷ் குணவர்தன தாய்லாந்து பயணம்

videodeepam

இலங்கையுடனான சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைக்கு இந்திய நாணயத்தை பயன்படுத்த அனுமதி

videodeepam