deepamnews
இலங்கை

சர்வதேச ரோட்டரி கழக தலைவர் இலங்கைக்கு விஜயம் – மருந்து பொருட்களும் அன்பளிப்பு

சர்வதேச ரோட்டரி கழகத்தின் தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார்.

இந்தியாவின் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யூ.எல் 128 என்ற விமானத்தில் நேற்று மதியம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

உலகின் 210 நாடுகளில் அங்கத்துவம் பெற்றுள்ள சர்வதேச ரோட்டரி கழத்தின் தலைவரின் வருகையை முன்னிட்டு நினைவு முத்திரையும் வெளியிடப்படவுள்ளது.

தமது இலங்கைக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

அவரது இலங்கை விஜயத்துடன் இணைந்து, ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்கள் நாட்டுக்கு வழங்கப்படவுள்ளதுடன், 500 இலங்கை மாணவர்களுக்கு பிலிப்பைன்ஸில் உள்ள பல்கலைக்கழகத்தில் தகவல் தொழிநுட்பம் கற்பதற்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. 

Related posts

கிளிநொச்சியில் பல குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிப்பு

videodeepam

மன்னாரில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது

videodeepam

பாராளுமன்றத்தில் எதிர்ப்பு போராட்டத்தை நடத்த எதிர்க்கட்சிகள் தீர்மானம் – பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு

videodeepam