deepamnews
இலங்கை

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, இந்தியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட அதிகாரப் பகிர்வு சிறப்பான முறையில் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இதே முறைமையை இலங்கையிலும் அமுல்படுத்துவதற்கான இயலுமை காணப்படுவதாக கூறியுள்ளனர்.

இங்கிலாந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல் சமூக கலாசாரங்கள் முற்றிலும் வேறுபட்டவை என்பதை அமைச்சர் டிரான் அலஸ் சுட்டிக்காட்டியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தில் போதைப்பொருள், குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்திற்கு பதிலளித்த அமைச்சர், இது தொடர்பான தகவல்களை விசேட பொலிஸ் குழுவிற்கு வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

Related posts

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் கைது! – டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல்

videodeepam

இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் 13 ஆம் திகதி ஜனாதிபதி ரணிலை சந்திக்கிறது கூட்டமைப்பு

videodeepam

வரலாற்று சிறப்புமிக்க அரசகேசரி பிள்ளையார் ஆலய இரதோற்சவம்!

videodeepam