deepamnews
இந்தியா

ஊழலை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும் –  ஜி 20 நாடுகளிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஜி20 அமைச்சர்கள் கூட்டம் மேற்கு வங்க மாநிலம் கல்கத்தாவில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதன்போது ஊழலை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி ஜி 20 நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  

ஊழலால் தீவிரமாக பாதிக்கப்படுவது நாட்டின் ஏழைகளும் விளிம்புநிலை மக்களும்தான். நாட்டின் வளத்தை ஊழல் பாதிக்கிறது. சந்தையை சிதைக்கிறது. அரசின் சேவைகளை பாதிக்கிறது. அனைத்துக்கு மேலாக, ஊழலால் மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுகிறது. நாட்டின் வளத்தை மக்களின் நலனுக்கான பயன்படுத்துவதே ஒரு அரசின் கடமை என்கிறது அர்த்தசாஸ்திரம். அந்த இலக்கை அடைய, ஊழலை ஒழிப்பது அவசியம்.

ஊழலுக்கு எதிராக இந்தியாமிகக் கடுமையான கொள்கைகளைக் கொண்டிருக்கிறது. ஊழலை ஒழிக்க தொழில்நுட்பத்தின் உதவியுடன் அனைத்துத் துறைகளிலும் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் முயற்சியை மத்தியஅரசு மேற்கொண்டு வருகிறது.

மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் அரசின் திட்டங்களில் இருக்கும் ஓட்டைகள் அடைக்கப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசின் நலஉதவிகள் நேரடியாக சென்றடைகின்றன.

வெளிநாடுகளுக்குத் தப்பி யோடும் பொருளாதாரக் குற்றவாளிகளை மீட்டு வருவது அனைத்து ஜி20 நாடுகளுக்கும் சவால் நிறைந்ததாக உள்ளது. 2014 ஆம் ஆண்டில் என்னுடைய முதல் ஜி 20 கூட்டத்திலும் இந்த விவகாரம் குறித்துப் பேசினேன். 2018 ஆம் ஆண்டு கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக 9 திட்டங்களை முன்வைத்தேன்.

ஊழலை முற்றிலும் ஒழிக்க நாடுகளிடையிலான ஒத்துழைப்பு அவசியம். சட்ட நடவடிக்கை, தகவல் பறிமாற்றம், சொத்தை முடக்குதல் உள்ளிட்ட தளங்களில் நாடுகளிடையே புரிந்துணர்வு வேண்டும். இதற்கு ஜி20 நாடுகள் முன்னுதாரணமாக திகழ வேண்டும். நமது கூட்டு முயற்சி மூலம், ஊழலை வேறோடு ஒழிக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 20 கோடி இந்திய ரூபா பெறுமதியான தங்கம்:  தமிழகத்தில் 5 பேர் கைது

videodeepam

இலங்கை மீனவர்கள் தாக்கியதில் 6 இந்திய மீனவர்கள் காயமடைந்ததாக தகவல்

videodeepam

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தையில் இணைய தயார்: பிரதமர் மோடி தெரிவிப்பு

videodeepam