இலங்கை மீனவர்கள் தாக்கியதில் 6 இந்திய மீனவர்கள் காயமடைந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, பெருமாள்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பவருக்கு சொந்தமான படகில் 6 மீனவர்கள் கடந்த 12ஆம் திகதி மீன் பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் நேற்றுமுன்தினம் இரவு கோடியக்கரைக்கு கிழக்கே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் கத்தி, கம்பு மற்றும் கற்களால் தாக்கியுள்ளனர்.
தரங்கம்பாடி மீனவர்களின் படகில் இருந்த வலைகள் மற்றும் மீன்களையும் இலங்கை மீனவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த 6 மீனவர்களும் நேற்று காலை கரைத் திரும்பினர்.
அவர்களை உறவினர்கள் சிகிச்சைக்காக பொரையாறு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.