deepamnews
இந்தியா

கடல் கடந்து கரம் பிடித்த காதலி. கடலூரில் திருமணம்

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ஒருவரை தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மநாபன் என்ற இளைஞர் காதலித்து கரம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வரும் பத்மநாபன் அதே நிறுவனத்தில் பணியாற்றிவரும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோ என்ற பெண்ணை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் நேற்றைய தினம் கடலூர் நடுவீரப்பட்டு பகுதியில் தமிழ் முறைப்படி இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மணமகள்கருத்துத் தெரிவிக்கையில் ”, தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து முறைப்படி திருவிழா போல எங்கள் திருமணம் நடந்தது. இதில் அனைவரும் கலந்து கொண்டு எங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். . இங்கே எல்லோரும் என்னை நன்றாகவே வரவேற்றனர். அன்பாக பழகினர். எனது திருமணத்தில் வயது முதிர்வு காரணமாக எனது பெற்றோர் கலந்து கொள்ளவில்லை. நேற்று நடந்த திருமணத்தை அவர்கள் ஒன்லைன் வீடியோவில் நேரலையாக கண்டு இருவரையும் வாழ்த்தியுள்ளனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவர்களது திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கர்நாடகாவில் இடைநடுவில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து – எழுந்துள்ள சர்ச்சை

videodeepam

எம்.ஜி.ஆரை பின்பற்றியவர்களுக்கு திராவிடக் கொள்கைகளைக் காக்கும் கடமை இருக்கிறது – தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பு

videodeepam

திமுக அங்கம் வகித்த மத்திய அரசால் தமிழ்நாட்டில் 2 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை – ஓ.பன்னீர்செல்வம் தெரிவிப்பு

videodeepam