deepamnews
இலங்கை

நல்லை கந்தனின் திருமஞ்சத்தை காண திரண்டு வந்த பக்தர்கள்!

யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா இன்று (30) மாலை வெகுசிறப்பாக இடம்பெற்றது.

சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் குமாரசுவாமியாக முருகப் பெருமான் எழுந்தருளி அருள் பாலித்தார்.

இந்த அழகிய மஞ்சத்திலே முத்துக் குமாரசுவாமி எழுந்தருளி இன்று பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சியினை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள், யாழ்ப்பாணம் ,வெளி மாவட்டங்கள் மற்றும் புலம்பெயர் தேசங்களில் இருந்து வருகை தந்து கூடியிருந்தனர்.

Related posts

வவுனியாவில் பாரிய பேரூந்து விபத்து – மூவர் உயிரிழப்பு

videodeepam

கடும்வறட்சி ஒருபுறம் காட்டு யானைகளின் தொல்லை மறுபுறம் விவசாயிகள் கவலை .

videodeepam

ஓமானில் இலங்கை பணிப்பெண்கள் விவகாரம் – மேலும் சில சம்பவங்கள் பகிரங்கம்

videodeepam