deepamnews
இலங்கை

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் இலவச கற்கை நெறிக்கான நேர்முகத் தேர்வு.

விரைவு சேவை உணவகங்களில் வேலைவாய்ப்பிற்கான இலவச கற்கை நெறிக்கான நேர்முகத்தேர்வு நாளை (31) காலை 09.00 மணிக்கு இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளதாக, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் கு.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இந்த கற்கை நெறியினை பயில்வதன் மூலம் நிறுவனப் பயிற்சியுடன் கூடிய தொழில்தறை பயிற்சியின் ஊடாக  NVQ மட்டம் 4 இனை பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், விரைவு சேவை உணவகங்களில் உடனடியாக வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக விபரங்களுக்கு, உதவிப் பணிப்பாளர், இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, இல : 12/4, கே.கே.எஸ் வீதி (வீரசிங்கம் மண்டபம் 04  ஆம் மாடி) யாழ்ப்பாணம் எனும் முகவரியிலோ, அல்லது 021 222 79 49, 021 221 17 93 மற்றும்  077 716 19 55 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழ். பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ்!

videodeepam

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

videodeepam

அவசியமான விடயங்களை இலங்கை செய்வதற்காக காத்திருக்கின்றோம் – சர்வதேச நாணயநிதியம்

videodeepam