deepamnews
இலங்கை

இலங்கை வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சரிடம் சித்தார்த்தன் எம்.பி முன்வைக்கவுள்ள கோரிக்கை.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளார். இதன் போது எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்குமாக இருந்தால் நாங்கள் அவருடன் முதலாவதாக, இந்திய மீனவர்கள் அத்துமீறி எமது நாட்டு எல்லைக்குள் வந்து மீன்பிடிப்பதை தடுப்பது தொடர்பாக அவரிடம் கோரிக்கைகள் முன்வைக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணமனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டாவதாக இந்த போதைப் பொருளானது அங்கிருந்துதான் கடத்தப்பட்டு எமது நாட்டுக்குள் வருகின்றது. அங்கு உற்பத்தி செய்யப்படுகிறது என்று அர்த்தமில்லை, அங்கிருந்து தான் வருகின்றது. இதனை தடுப்பதற்கு இந்திய அரசாங்கம் முயற்சி எடுக்கின்றது.. இருப்பினும் அது போதுமானதாக இல்லை.

அது மிகவும் பாரிய தொகையாக இங்கு வருகின்றது. அது இங்கு இருக்கின்ற இளைஞர் யுவதிகளை மிகவும் பாதிக்கின்றது. அதனை தடுக்க வேண்டும் என்று தான் நான் கேட்டுக் கொள்வேன் என்றார்.

Related posts

இலங்கை போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச பொறி – வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஐ.நாவுக்கு மஜகர் கையளிப்பு.

videodeepam

அரசாங்கத்தை கையாள்வது தனக்கு கடினமானது – பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவிப்பு

videodeepam

பெற்றோலிய விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கு வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு

videodeepam