கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி முதல், கிழக்கு உக்ரைனுக்குள் நுழைந்து, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு, உக்ரைன் இராணுவத்தினரும் எதிர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
ஆரம்பத்தில் போரில் உக்ரைன் சற்று பின் தங்கியிருந்தாலும் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் உதவியுடன் தற்போது வரை எதிர்கொண்டு வருகிறது.
போரின் காரணமாக, உக்ரைனில் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. மாணவர்கள் தங்களின் கல்வியை இணையவழி மூலமாக தங்கள் வீட்டியில் இருந்தே கற்று வந்தனர்.
இந்த நிலையில், தங்கள் மாணவர்களின் புதிய கல்வி ஆண்டைத் ஆரம்பித்துள்ளனர் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் அந்த பதிவில் மேலும் குறிப்பிடுகையில்,
போர் இருந்தபோதிலும், உக்ரைனில் பாடசாலை மாணவர்கள் மீண்டும் புதிய கல்வி ஆண்டைத் ஆரம்பித்துள்ளனர். வெற்றிகரமான ஆண்டுக்கு அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நாடு முழுவதும் பாதுகாப்பை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். நேர்மையாகவும், உறுதியாகவும் இருப்பவர்களுக்கும், மற்றவர்களின் உதவியைப் பெறுபவர்களுக்கும் மிகப்பெரிய கனவுகள் கூட நனவாகும் என குறிப்பிட்டுள்ளார்.