deepamnews
இலங்கை

கைத்தொழில் அபிவிருத்தி கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வு இன்று.

“Industry Jaffna Edition-2023” என பெயரிடப்பட்ட கைத்தொழில் உற்பத்தி கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று  காலை 10 மணிக்கு ஆரம்பமானது. 

குறித்த கண்காட்சி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய கலாச்சார மத்திய நிலைய வளாகத்தில் இடம்பெறுகின்றது.

கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அதிகாரசபையும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வில்  பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்க கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்வில் திணைக்களம் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள், அமைச்சின் செயலாளர்கள், கைத்தொழில் அதிகார சபை அதிகாரிகள், ஊழியர்கள், உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கைத்தொழில் உற்பத்தி கண்காட்சிக்கூடத்தை பார்வையிட்டனர். 

நேற்று முன்தினம் ஆரம்பமான குறித்த கண்காட்சி இன்று மாலையுடன்  நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக் கண்காட்சி கூடத்தில் நாடளாவிய ரீதியிலிருந்து வருகை தந்த கைத்தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தியுள்ளதுடன்

சந்தைப்படுத்தலிலும் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

யாழில் சூரிய சக்தியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தில் இயங்கும் இயந்திரபடகு

videodeepam

தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு – நடிகை தமிதா அபேரத்ன அறிவிப்பு

videodeepam

நீண்ட கால மின் உற்பத்தி திட்டத்தை நாடாளுமன்றத்தில்  சமர்ப்பித்தார் அமைச்சர் கஞ்சன விஜசேகர

videodeepam