deepamnews
இலங்கை

நாவலப்பிட்டி மாகும்புர பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதிதாக மதிலொன்றை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போதே, மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வேரலுகஸ்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

பொதுமக்களுக்கு காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

videodeepam

இலங்கைக்கான கடன் சலுகைக்காலத்தை நீடித்தது இந்தியா:  ஒரு வருட அவகாசம் வழங்கியது

videodeepam

காற்றாலை மின் திட்டங்களின் திறனை அதிகரிக்க அதானி குழுமம் கோரிக்கை

videodeepam