deepamnews
இலங்கை

இந்த மாத இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் சினோபெக் எரிபொருள் விநியோகம்.

இந்த மாத இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் தமது சந்தை செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் உள்நாட்டு எரிபொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன அதிகாரிகளுடன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த நிறுவனத்தின் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளின் முன்னேற்றம், எரிபொருள் விநியோக முகவர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் அதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

200 இற்கும் மேற்பட்டவர்களுடன் மற்றுமொரு படகு கடலில் தத்தளிப்பு

videodeepam

யாழ்ப்பாணத்தில் மலையக மக்களின் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு

videodeepam

இரண்டாந்தர மொழி இண்றியமையாதது-வடக்கு ஆளுநர் தெரிவிப்பு.

videodeepam