deepamnews
இலங்கை

திருகோணமலையில் விகாரை அமைப்பு – ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்,

திருகோணமலை, இலுப்பைக்குளத்தில் பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதன் காரணமாக அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை, பிராந்தியத்தில் திட்டமிடப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று எச்சரித்து, ஜனாதிபதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கடிதம் எழுதியுள்ளார்.

99 வீதமான தமிழர்கள் வாழும் இந்தப்பிரதேசத்தில் விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை அந்த பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அது நீடித்தால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் எனவும் சம்பந்தன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும்,அந்த இடத்தில் உள்ள பௌத்த நினைவுச்சின்னங்கள் பராமரிக்கப்படக் கூடாது என்று தாம் கூறவில்லை என  கூறியுள்ளார்.

குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டுடன் கணிசமான அபிவிருத்தியை கருத்தில் கொள்ளும்போது சமூக சூழலை சீர்குலைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காக்கைதீவுக்கு விஜயம்

videodeepam

உயிரினங்கள் சிலவற்றை கொல்வதற்கு அனுமதி – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு

videodeepam

கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார் என எஸ். ஜெய்சங்கர் உறுதி

videodeepam