deepamnews
இலங்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க பணிப்பாளர்களுக்கு தடை.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க பணிப்பாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கையடக்க தொலைபேசியை பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு இடது கை மாணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் அண்மையில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தாதியர்கள் கவன குறைவினாலையே சிறுமியின் கை அகற்றப்பட்டது என பல தரப்பினராலும் குற்றம் சாட்டப்பட்டுவரும் நிலையில் கடமையின் பொது ஸ்மார்ட் போன் பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடினமான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதால் குற்றஞ்சாட்டப்படுகிறோம் – மத்திய வங்கி ஆளுநர் ஒப்புதல்

videodeepam

உத்தரதேவி புகையிரதத்துடன் மோதுண்டு முறுகண்டியில் யானை பலி.

videodeepam

வடக்கில் நேற்று அடுத்தடுத்து விபத்துகள் – 2 பேர் பலி, 50 பேர் வரை காயம்

videodeepam