deepamnews
இலங்கை

பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது .

பொரளை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் போல் நடித்து பணத்தை மோசடி செய்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் .சந்தேகநபர் 05 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பெண் தனியார் காப்புறுதி நிறுவனத்தில் பணிபுரிந்தவாறு இந்த பண மோசடியை செய்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், உயர் பெண் பொலிஸ் அதிகாரி எனக் கூறி இரண்டு சந்தர்ப்பங்களில் 5 இலட்சம் ரூபாயை அவரது வங்கி கணக்கில் வைப்பிலிட செய்துள்ளார்.பொரளை சரணபால மாவத்தையை சேர்ந்த 24 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பொலிஸ் அடையாள அட்டை மற்றும் பொலிஸ் தலைமையகத்தின் லெட்டர்ஹெட் ஆகியவற்றை போலியாக தயாரித்து, அதன் புகைப்படங்களை வாட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் அனுப்பி இந்த மோசடியை செய்துள்ளார்.போலி ஆவணங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாழில் இன்று அரசுக்கு எதிராக போராட்டம்

videodeepam

அரசுக்கு சாதகமான செய்திகளுக்கு மாத்திரம் அனுமதி – சித்தார்த்தன்

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 37,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

videodeepam