deepamnews
இலங்கை

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்!

தியாகதீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டணம் தெரிவித்தது.

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஊடக பேச்சாளர் இ.தர்ஷன் கண்டணம் தெரிவித்தார்.

இதன் போது வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சி.ஜெல்சின், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் யோ.நெவில்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் ஊர்திப் பவனிமீது சிங்கள காடையர் குழுவின் திட்டமிட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.

சாதரண எங்கள் நினைவேந்தலைக்கூட செய்ய முடியாத இந்த துர்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் பொறுப்பு கூறுவதோடு இந்த திட்ட தாக்குதலை செய்ய தூண்டியவர்களுக்கும் தாக்குதலை நடாத்திய காடையர்களுக்கு உரிய தண்டனையினையும் வழங்கவேண்டும் என குறிப்பிட்டனர்.

Related posts

முல்லைத்தீவு நீதிபதி விடயம் தொடர்பாக உரியவர்கள் உடன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – மு.தம்பிராசா

videodeepam

கடன் விவகாரங்களில் இலங்கை அதிகாரிகளின் முன்னேற்றத்தை வரவேற்கிறது சர்வதேச நாணய நிதியம்

videodeepam

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவம்!

videodeepam