வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி திருக்கோவில் உயர் திருவிழாவில் சேவையில் ஈடுபட்ட இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கி மதிப்பளிக்கும் நிகழ்வு, நல்லூர் சிவகுரு ஆதீன மண்டபத்தில் சிவகுரு ஆதீன குருமுதல்வரும் இலங்கை முதலுதவிச் சங்கம் இந்து சமயத் தொண்டர் சபையின் ஆலோசகருமான வணக்கத்துக்குரிய தவத்திரு வேலன் சுவாமிகள் முன்னிலையில் சுவாமிஜியின் ஆசியுரையுடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம் பெற்றது.
நிகழ்வில் IOM அமைப்பின் பணிப்பாளர், செம்பகம் அமைப்பின் பணிப்பாளர், அருட்தந்தை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபை தொண்டர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி மதிப்பளித்தனர்.
இந்நிகழ்வில் இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் தேசிய ஆணையாளர் வை. மோகனதாஸ், அமைப்பின் தேசிய கண்காணிப்பாளர் கலாநிதி ஜெகதாஸ், மகளீர் பிரிவு கண்காணிப்பாளர் செல்வி நிலாமதி , மகளிர் பிரிவு பொறுப்பாசிரியர் திருமதி கேதீஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு இருந்தனர் .
இதில் இலங்கை முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் கலை பண்பாட்டுப் பிரிவினரின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.