deepamnews
இலங்கை

தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலி!

கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உற்பட்ட செல்வா நகர் பகுதியில் நேற்றைய தினம் 29.09.2023 வீட்டில் அமைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து 1 ஒரு வயது மதிக்கத்தக்க பரனிதரன் திவனிக்கா எனும் சிறுமி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து தெரிவதாவது.
தாயார் புட்டு அவித்துக்கொண்டிருந்த சமயம் அயலிலுள்ள சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிந்த சிறுமி திடீர் என கிணற்றின் தொட்டியினை அருகில் இருந்த கல்லின் மீது ஏறி பாரத்தபொழுது சிறுமி தவறிவிழுத்துள்ளார்

சிறிது நேரம் கழித்து சிறுமியை காணாத தாயார் தேடியபொழுது தண்ணீரில் மூல்கியநிலையில் காணப்பட்டதையடுத்து,சிறுமியை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற பொழுது சிறுமி ஏற்கனவே உயிரிலந்துள்ளார் என வைத்தியர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் கிளிநொச்சி வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாககவும் மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி போலீசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts

தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவுகூரல்கள் முன்னெடுப்பு

videodeepam

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் டலஸ் அழகப்பெரும.

videodeepam

ஜனாதிபதியின் விஜயத்தின் போது ஆர்ப்பாட்டம் – 30 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.

videodeepam