deepamnews
இலங்கை

கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வு பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இன்று மீண்டும் ஆரம்பம் .

கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி 20.10.2023 அன்று அகழ்வு பணிகள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் 17 அடி வரை அகழ்வு பணிகள் நடைபெற்றது

இவ் அகழ்வு பணிகள் கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் துபராகினி ஜெகநாதன் அவர்கள் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரி மற்றும் கிராம சேவையாளர் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் அகழ்வு பகுதிகளில் இரண்டு இயந்திரங்கள் மூலம் அகழ்வு பணி நடைபெற்றது.

அகழ்வு இடம்பெற்ற இடத்தில் எந்த வித தடையங்களோ கிடைக்கப்பெறவில்லை இதையடுத்து எதிர்வரும் 22.10.2023 அன்று 9.00 மணி அளவில் மீண்டும் அகழ்வு பணி தொடரும் என நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதுக்கு அமைவாக இன்று கிரமசேவகர் முன்நிலையில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அகழ்வு பணி இடம்பெற்ற இடத்தில் எந்த சான்று பொருட்களும் காணப்படாத காரணத்தினால் கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் துபராகினி ஜெகநாதன் அவர்கள் அகழ்வு பணியைநிறுத்துமாறு கூறியுள்ளார்.

Related posts

தேசிய, சர்வதேச மட்டங்களில் அரசாங்கம் மோசமான அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும் – பீரிஸ் எச்சரிக்கை

videodeepam

ஏப்ரல் 5 பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

videodeepam

இலங்கைக்கு எதிரான சனல் 4 காணொளி மேற்கத்திய நிகழ்ச்சி நிரலின் வெளிப்பாடு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு.

videodeepam