deepamnews
இலங்கை

ஜனாதிபதின் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு.

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சுங்க வரியில்லா வணிக வளாக வர்த்தகத்தை நடத்துவதற்கு, ஒரு முதலீட்டாடளர் குறைந்தபட்சம் 07 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டும்.

இதேவேளை ஒரு முதலீட்டாளர் ஒரு சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகத்தை நடத்த குறைந்தபட்சம் 05 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டும். குறித்த முதலீட்டாளருக்கு சுங்க வரியில்லா வர்த்தக நடவடிக்கைகளில் உலகளாவிய அனுபவமும் இருக்க வேண்டும் என்று குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பொங்கல் பூசை செய்ய விடாது பெண்ணை திருப்பி அனுப்பிய ஆலய குருக்கள்

videodeepam

தேர்தல் பணிகளுக்கு எரிபொருள் நிவாரணம் இல்லை –  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

videodeepam

அச்சிடும் பணிகளுக்காக தாம் கோரிய நிதி கிடைக்கவில்லை என்கிறார் அரச அச்சகர்

videodeepam