deepamnews
இலங்கை

தமிழர்கள் வாழும் இடங்களில் இராணுவ மயமாக்கல் தீவிரம் –  பிரிட்டன் எம்.பி. வலியுறுத்து

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவ மயமாக்கல் தொடர்கின்றது என்று பிரிட்டனின் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்டொனல் தெரிவித்துள்ளார்.

இது பிரிட்டனினதும் சர்வதேச சமூகத்தினதும் கூட்டுத் தோல்வி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு எதிராகத் தடைகளை விதித்தமைக்காக அமெரிக்கா கனடாவைப் பாராட்டுகின்றது என்று தெரிவித்துள்ள அவர், தடைகள் மற்றும் வர்த்தக வரிகள் மூலம் அதிகூடிய அழுத்தங்களை இலங்கைக்குக் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“எனது தொகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தைப் பற்றி அறிய இலங்கைக்குச் சென்றார். அதன் பின்னர் அவர் காணாமல்போய்விட்டார்” – என்றும் பிரிட்டன் எம்.பி. ஜோன் மக்டொனல் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்திய பிரதமரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கை – இரா.சம்பந்தன் எழுதிய கடிதம்.

videodeepam

சமையல் எரிவாயுயின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு !

videodeepam

யாழில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வெள்ளி, ஞாயிறு விடுமுறை!

videodeepam