இந்திய பெருங்கடலில் மசகு எண்ணெய்யுடன் பயணித்த கப்பலொன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவின் மங்களுருக்கு பிரவேசித்த எம்.வி.செம் என்ற கப்பல் மீதே இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின் காரணமாக குறித்த கப்பல் தீ பிடித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கப்பல் பரவியுள்ள தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் கப்பலின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கப்பலில் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்புடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள அனைத்து கப்பல்களுக்கும் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.