தேர்தல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம். தற்போதைய அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை.அவ்வாறு முதுகெலும்பு இருந்தால் தேர்தல் ஒன்றை நடத்துங்கள். எங்களிடம் டீல் இல்லை.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதனையடுத்து கொழும்பு விகாரமகாதேவி பூங்கா பிரதான நுழைவாயில் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய பேரணி உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பித்த பாதைகளில் நாங்கள் பேரணி நடத்தவில்லை.நாம் சட்டத்தை மீறி செயற்படவில்லை.வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம்,எங்களுக்குத் தேர்தலே வேண்டும்.
அரசியல் ரீதியிலான டீல்கள் மூலம் அன்றி மக்கள் அனுமதியுடனயே ஆட்சிக்கு வருவோம்.மக்கள் ஆசிர்வாத்தின் ஊடாகவே நாம் ஆட்சிக்கு வருவோம் என்பதை இந்த ரணில் ராஜபக்ச அரசாங்கத்திடம் கூறுகிறோம்.
ரணில் ராஜபக்ச அரசாங்கம் மக்கள் வெள்ளத்திற்கு பயந்து விட்டனர். இது கோழைத்தனமான அரசாங்கமாகும். இது முதுகெலும்பு இல்லாத அரசாங்கம். “- என்றார்.