deepamnews
இலங்கை

இலங்கையில் தேர்தல் என்பது நகைச்சுவையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது  – பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு

இலங்கையில் தேர்தல் என்பது நகைச்சுவையான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ராஹேன ஹெட்டியாரச்சி விசனம் வெளியிட்டுள்ளார்.

ஜனநாயகத்துக்கான சிவில் சமூக கூட்டமைப்பு இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு விசனம் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தல், அரசியலமைப்புக்கும் தேர்தல் சட்டத்துக்கும் எதிராக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் சர்வதேச சமூகம் இதுதொடர்பாக பெரிதளவில் குரல்கொடுப்பதை காணக்கூடியதாக இல்லை.

எமது நாட்டு பிரச்சினைகளை நாட்டு மக்களே கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

சிவில் அமைப்புகளை ஒன்றிணைத்துக்கொண்டு, மக்களை அடக்கும் சட்டமூலங்களை வாபஸ்பெற்றுக்கொள்ள அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சிக்கிறோம்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த 4 தடவைகள் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த 4 சந்தர்ப்பங்களும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

தேர்தலுக்கான திகதி அறிவிப்பு செய்ய முடியாத நிலைக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவை அரசாங்கம் நிர்க்கதிக்குள்ளாகி இருக்கிறது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த சட்டத்தின் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருக்கிறது. அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் நடத்தப்படவேண்டும். ஆனால் தற்போது தேர்தல் இடம்பெறுவது தாமதித்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Related posts

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் –   இலங்கையிடம் ஐ.நா மனித உரிமைகள் குழு கோரிக்கை

videodeepam

யுத்திக நடவெடிக்கையின் போது கஞ்சாயவுடன் ஒருவர் கைது இருவர் தப்பியோட்டம் .

videodeepam

பளை – முல்லையடி பகுதியில் கோரவிபத்து

videodeepam