deepamnews
சர்வதேசம்

சூடானில் இடம்பெறும் மோதல்களால்  413 பேர் பலி, 3,551 பேர் காயம் –  உலக சுகாதார ஸ்தாபனம் அறிவிப்பு  

சூடானில் இடம்பெறும் மோதல்களால் 413 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3,551 பேர் காயமடைந்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் மார்கரெட் ஹரீஸ் இதனைத் தெரிவித்தார்.  

‍மோதல்களில் சிக்கி  சிறார்கள் உயிரிந்துள்ளனர் எனவும் 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

சூடானின் இராணுவத் தளபதி அப்தேல் ஃபத்தா அல் புர்ஹானுக்கு ஆதரவான படையினருக்கும் துணை இராணுவப் படையின் தளபதி மொஹம்மத் ஹம்தானி தாக்லோவுக்கு ஆதரவான படையினருக்கும் இடையில் கடந்த 15 ஆம்  திகதி முதல் கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன.

தலைநகர் கார்ட்டூமில் மக்கள் அடர்த்தி மிகுந்த பிரதேசங்களில் இன்று மோதல்கள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு 3 நாட்கள் போர் நிறுத்தத்தை கடைபிடிக்குமாறு சூடான் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸ், அமெரிக்க வெளிவிவகார செயலாளர் அன்டனி பிளின்கென் ஆகியோர் தனித்தனியாக கோரிக்கை விடுத்தனர். ஆனால், இக்கோரிக்கைகளுக்கு இதுவரை செவிசாய்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹொண்டுராஸில் பெண்கள் சிறைச்சாலையில் கடும் மோதல் – 41 பெண்கள் பலி..!

videodeepam

முடிசூட்டு விழா –  பிரித்தானிய மன்னர் 3 ஆம் சார்ள்ஸ் மற்றும் ராணி காமிலாவின் புதிய புகைப்படங்கள் வெளியாகின

videodeepam

இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கியுள்ள  யேமனில் செயற்படும் ஹவுதி அமைப்பு.

videodeepam