deepamnews
இலங்கை

தொழில் தொடங்கும் நபர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க தீர்மானம் – மனுஷ நாணயக்கார தெரிவிப்பு

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து மீண்டும் தொழில் தொடங்கும் நபர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று (25) விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

வெளிநாட்டு ஊழியர்களுக்கு 2 மில்லியன் ரூபா வரை குறைந்த வட்டியில் கடனாக வழங்குவதற்கு நேற்று அமைச்சரவை ஒப்புதல் அளித்து அமைச்சரவையில் முன்மொழிந்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 5 பில்லியன் ரூபாவை பரிந்துரை செய்துள்ளது.

2 மில்லியன் ரூபா கடனுதவி வழங்கப்படும், நாட்டில் இருப்பவர்களுக்காகவும் தற்போது இங்கு இருப்பவர்களுக்காகவும் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை மீண்டும் தொழில் முனைவோராக மாற்றுவதற்கு இந்தக் கடன் முறையை மேலும் விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை அந்த வருடத்தில் 30,915 பெண்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்லும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வெளிநாட்டு வேலைகளுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யும் போது அந்த நபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் தகவல்கள் கணினி தரவு அமைப்பில் உள்ளடக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு பிராந்திய அலுவலகங்கள் ஊடாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமித்துள்ளது. வெளிநாடு சென்றுள்ள குடும்பங்களின் தகவல்களைப் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

Related posts

கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு ரூபா 5 இலட்சம் பெறுமதியான மருந்துகள் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வழங்கிவைப்பு!

videodeepam

எரிசக்தி இறக்குமதிக்கு வாரத்துக்கு 50 மில்லியன் டொலர்களே வழங்க முடியும் – மத்திய வங்கி

videodeepam

கார்பன் வெளியேற்றம் தொடர்பில் இலங்கையுடன் சிங்கப்பூர் ஒப்பந்தம்.

videodeepam